35 வருடங்களுக்கு பின்னர் புனரமைக்கப்பட்ட குளம் உடைப்பெடுப்பு!
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செலயகப்பிரிவிலுள்ள குமுழமுனை கிழக்கில் அமைந்துள்ள நித்தகைக்குளம் இன்று(வியாழக்கிழமை) காலை உடைப்பெடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டின் மாகாண நீர்ப்பாசன அமைச்சின் நிதி உதவியில் கடந்த 35 வருடங்களுக்கு பின்னர் இந்த வருடம் புனரமைப்புச் செய்யப்பட்ட குளமே கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக உடைப்பெடுத்துள்ளது.
குறித்த குளத்தில் 13அடி தண்ணீர் கொள்ளளவு செய்யக்கூடியதாக இருந்துள்ளது. இந்நிலையில் கடும்மழை காரணமாக இக்குளத்தில் இன்று காலை உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் அதனை அண்டிய விவசாய வயல்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விவசாயிகளின் உடமைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
எனினும் எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என்றும் குளத்தை அண்டி அருகிலுள்ள கிராமங்களிலுள்ளவர்களை பாதுகாப்பான இடங்களில் குடியமறுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.