முல்லைத்தீவை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்!
முல்லைத்தீவில் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு பயணிகளின் வருகை அண்மைய நாட்களாக அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைகளுக்கு மத்தியில் இலங்கையின் இயற்கையை ரசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகைத்தருகின்றனர்.
மேலும், இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தினால் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் தனது நாட்டு பயணிகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்திருந்தது.
எனினும், முல்லைத்தீவுக்கு வழமையான நாட்களை விட தற்போது அதிகளவான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைத் தருகின்றமை குறிப்பிடத்தக்கது.