இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 30 அடியாக அதிகரிப்பு!
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 30 அடியாக உயர்வடைந்துள்ளது.
கிளிநாச்சி மாவட்டத்தில் தற்போது வெள்ளம் வடிந்தோடியுள்ள நிலையில் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 30 அடியாக உயர்வடைந்துள்ளது.
இந்தநிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் அரசாங்க அதிபர் தெரிவிக்கையில், “சீரற்ற வானிலையால் மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
அதிக மழைவீழ்ச்சி காரணமாக கடந்த வாரம் மிக குறைவாகவிருந்த இரணைமடு குளத்தின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து 30 அடியாக உயர்வடைந்துள்ளது.
குளங்கள் சில வான்பாய்ந்தமையால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றது“ என தெரிவித்துள்ளார்.