கட்சியிலிருந்து நான் விலகவில்லை!

கட்சியிலிருந்து நான் விலகவில்லை!

ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியிலிருந்து தான் விலகவில்லை என்றும், தன்னைக் கட்சி விலக்கவும் இல்லையென்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் அக்கட்சியின் முக்கியஸ்தருமான எஸ்.தவராசா தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள அவரது வீட்டில் நேற்று (வியாழக்கிழமை) ஊடக சந்திப்பொன்று நடைபெற்றது.

இதன்போது ஊடகவியலாளர்கள், ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியிலிருந்து ஒதுங்கியிருக்கின்ற நீங்கள் மீளவும் அக்கட்சியில் இணைந்து செயற்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஈழ மக்கள் ஐநயாகக் கட்சியிலிருந்து மாகாண சபைக்கு வந்து, அக்கட்சி உறுப்பினராகச் செயற்பட்டுக் கொண்டிருந்த நிலையில், கட்சி செயற்பாடுகளில் முன்னரைப் போன்று கூடுதலாகச் செயற்படவில்லை என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். அதற்கு பல காரணங்ள் உள்ளன.

அதற்காக நான் கட்சியிலிருந்து விலகியதாகவோ அல்லது கட்சி என்னை விலக்கியதாகவோ அர்த்தம் இல்லை.

மேலும் கட்சியின் செயலாளர் நாயகம் தற்போது மீள்குடியேற்ற இந்து கலாசார வடக்கு அபிவிருத்தி அமைச்சைப் பொறுப்பெடுத்திருக்கும் நிலையில், வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் அமைச்சின் செயற்பாட்டை உத்வேகத்துடன் கொண்டு செல்வதற்கு என்னுடைய பங்களிப்பை அல்லது ஆலோசனை வழங்குமாறு என்னிடம் விடுத்த கோரிக்கைகையை நான் நிராகரிக்கவில்லை.

மாகாணத்தின் அபிவிருத்திக்காக நானும் என்னாலான சேவைகளைச் செய்ய வேண்டியுள்ளது. அதற்கமைய என்னுடைய முடிவுகள் அமையலாம்.

ஆகவே, ஐனாதிபதியின் தீபாவளிப் பண்டிகை நிகழ்வில் நானும் கட்சித் தலைமையும் கலந்து கொண்டிருந்ததை இணைந்துவிட்டோமென செய்திகள் வந்திருக்கலாம். அதற்காக பிரிந்திருந்தவர்கள் மீளவும் சேர்ந்து விட்டோமென அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது.

இருவருக்கும் குறித்த நிகழ்வுக்கான அழைப்பு வந்தது அதற்கமைய சென்று நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கின்றோம்” என தவராசா சுட்டிக்காட்டியுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net