தென்னிலங்கையில் மிஞ்சிய நீர் கிளிநொச்சிக்கு கொண்டுவரப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
தென்னிலங்கையில் மிஞ்சிய நீர் கிளிநொச்சிக்கு கொண்டு வரப்பட்டு கிளி நொச்சியில் மூன்று போக பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் நிலைமையை உருவாக்குவோம் என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம்(09) கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் புனர்வாழ்வு அதிகார சபையினால் நட்டஈடு வழங்கும் நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மகாவலி வேலைத்திட்டம் பற்றி கடந்த காலத்தில் பேசப்பட்டது அதில் பல்வேறு கருத்துக்கள் பரப்பட்டது.
குடியேற்றம் தொடர்பில் கூறப்பட்டது எனவே அதில் சிலவற்றில் உண்மைகளும் இருக்கலாம் ஆனால் பெரும்பாலனவை அரசியல் நோக்கங்களுக்காக பரப்பட்டக் கருத்துக்களாகும் எனத் தெரிவித்த அமைச்சர்
ஒருவிநாடி கிடைத்தாலும் அந்த ஒரு நொடிப்பொழுதையும் நான் எமது மக்களின் நலனுக்காகவே நிச்சயம் பயன்படுத்துவேன்.
மக்களுடைய பிரதிநிதிகள் என்று கூறப்படுபவர்கள் கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பங்களை கடந்த காலங்களில் சரியாகப் பயன்படுத்தவில்லை.
கடந்த மூன்றரை வருடங்களாக முன்னைய அரசு எமது மக்களுக்கான பணிகள் குறித்து ஆற்றலுடனும் அக்கறையுடனும் செய்யவில்லை என மக்களால் குறை கூறப்பட்டது.
அக்காலப் பகுதியில் இந்த வீட்டுத்திட்டம் தொடர்பில் எந்த வீடு எந்த அமைச்சுக்குக் கொடுப்பது என்பது தொடர்பில் கூட காலம் கடத்தப்பட்டது.
ஆனாலும் இந்த மாதம் இறுதியில் வீடுகளைக் கட்டுவதற்கு எமது அமைச்சினூடாக இயலுமான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம்.
இருந்தபோதிலும் முறைகேடுகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. எமது அமைச்சினூடாக குறைந்தளவிலான வீடுகளுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. எனத் தெரிவித்த அவர்
வடக்கு மாகாண சபையின் கடந்த 5 வருடகால சேவைகளைப் பார்த்தால் பூச்சியமாகவே இருக்கின்றது.
அதிகாரம் இல்லை என்று கூறியவர்கள் பின்னர் அதிகார துஸ்பிரயோகம் நடந்ததாக தெரிவித்தார்கள், நிதி இல்லை என்றார்கள் பின்பு நிதி மோசடி நடந்தது என்றார்கள் எனவே மக்கள இதனை மக்கள் தெளிவாக இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
சம்மந்தன் மாகாண சபையை கொண்டு மக்களுக்கு மேலும் பணியாற்றியிருக்கலாம் எனத் தெரிவித்தார் அத்தோடு வடக்கு மாகாணசபை முன்னாள் அவைத்தலைவர் சிவஞானம் கடந்த 5 வருட காலத்தை வீணடித்துவிட்டோம் என்றும் கூறியிருந்தார் என்பதனை இங்கு நினைவு படுத்த விரும்புகின்றேன்.
எனவே தமிழில் ஒரு பழமொழி உண்டு ஆதாவது இருக்கிறவன் சரியாக இருந்தால்…….. என்பது போல தமிழ்த் தலைமைகள் சரியா இருந்திருந்தால் தமிழ் மக்கள் இவ்வாறு அவலத்தில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
எனவே தமிழ் மக்களின் இன்றை அவலத்திற்கு தமிழ்த் தலைமைகளே காரணம் எனக் குறிப்பிட்டார்
இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் அன்னலிங்கம் அதன் சிரேஸ்ட ஆலோசகர் விக்னேஸ்வரன் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிரதேச செயலாளர்கள் பயனாளிகள் என பலர் கலந்கொண்டனர்.