மட்டக்களப்பில் 60 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை நாசம்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் சில தினங்களாக பெய்துவரும் அடை மழை காரணமாக இதுவரை 60 ஆயரம் ஏக்கர் நெற்செய்கை நீரில் மூழ்கி, நாசமாகியுள்ளதாக மாவட்டத்தின் அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இம் முறை மட்டு. மாவட்டத்தில் 1 இலட்சத்து 68 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் நெற்செய்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
இந் நிலையில் நிலவும் சீரற்ற காலநிலையினால் இவற்றுள் 60 ஆயரம் ஏக்கர் நெற்செய்கை பாதிப்படைந்துள்ளது.
மேலும் இம் மழையானது ஓரிரு தினங்கள் தொடர்ந்தால் மாவட்டத்தில் உள்ள அனைத்து வயல் நிலங்களும் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படுவதுடன் அனைத்து வயல் நிலங்களையும் மீண்டும் விதைக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.