வங்கக்கடலில் புயல் அபாயம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வங்கக்கடலில் புயல் அபாயம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வங்கக்கடலில் அடுத்த 3 தினங்களில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் புவியரசன் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் கூறியபோது,

“மத்திய அந்தமான் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக சீர்காழியில் 7 செ.மீ. மழையும், நன்னிலத்தில் 5 செ.மீ. மழையும், குடவாசலில் 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

இது நேற்று குறைந்த காற்றழுத்தமாக மாறியிருந்தது. அடுத்து வடமேற்காக நகர்ந்து வலுப்பெற்று புயலாக மாறவுள்ளது.

இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி அடுத்த 3 நாட்களில் புயலாக மாறும் என்பதால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக நாளை முதல் அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கும், 11ஆம் திகதி வங்கக்கடல், வட அந்தமான் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கும், 12ஆம் திகதி மத்திய வங்கக்கடல் பகுதிக்கும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net