3 வயது குழந்தையின் வாயில் பட்டாசு வைத்து வெடித்த இளைஞன்!

3 வயது குழந்தையின் வாயில் பட்டாசு வைத்து வெடித்த இளைஞன்!

உத்தர பிரதேசத்தில் 3 வயது குழந்தையின் வாயில் பட்டாசு வைத்து வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் மில்லக் கிராமத்தில் தீபாவளி தினத்திற்கு முதல்நாள் இரவு சிறுவர்கள் சிலர் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சசிகுமார் என்பவரின் 3 வயது மகள் பட்டாசு விபத்தில் பலத்த காயமடைந்தார்.

அதனால், அவரது வாய் சிதைந்த நிலையில் கதறித் துடித்தாள்” குறித்த குழந்தையின் வாயில் இளைஞன் ஒருவர் பட்டாசு வைத்து வெடித்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. குழந்தையின் வாய்ப்பகுதியில் 50 தையல்கள் போடப்பட்டுள்ளன.

தொண்டையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. குறித்த குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் வாயில், அதே பகுதியைச் சேர்ந்த ஹர்பால் என்ற இளைஞர் பட்டாசை வைத்து வெடிக்க செய்ததாக பொலிஸ் நிலையத்தில் அவரது தந்தையால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஹர்பாலை தேடி வருகின்றனர்.

குழந்தையின் வாயில் பட்டாசு வைத்து வெடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Copyright © 0708 Mukadu · All rights reserved · designed by Speed IT net