நிறைவேற்று அதிகாரத்தினை மைத்திரி தவறாக பயன்படுத்துகின்றார்!

நிறைவேற்று அதிகாரத்தினை மைத்திரி தவறாக பயன்படுத்துகின்றார்!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தவறான வகையில் பயன்படுத்துவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 12 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று(சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் அனைவரும், தேர்தல் காலத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக கூறுகின்றனர்.

எனினும் அவர்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுதில்லை.

அந்த வரிசையில் தற்போது மிகவும் மோசமாக தீவிரமாக அதுவும் பிழையாக அரசியல் அமைப்பிற்கு விரோதமாக, ஜனநாயகத்திற்கு விரோதமாக கடைப்பிடித்து நடைமுறைப்படுத்துகின்றார் என்றால் அது இன்றைக்கு சாவின் விளிம்பிலிருந்து தப்பி வந்து ஜனாதிபதியாக இருக்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதான் என பகிரங்கமாக அவர் மீது குற்றம் சுமத்த விரும்புகின்றோம்“ என தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net