பெண்ணிடம் குழந்தையை கொடுத்துவிட்டு தப்பி ஓடிய தாய் !
திருவள்ளூர் போருந்து நிலையத்தில் பெண்ணிடம் பிறந்து ஒரு வாரமே ஆனு குழந்தையை கொடுத்துவிட்டு தாய் தப்பி ஓடிய சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள். இவர் திருவள்ளூர் போருந்து நிலையத்தில் மரவள்ளிக் கிழங்கு வியாபாரம் செய்து வருகின்றார்.
நேற்று இரவு 7 மணி அளவில் பஸ் நிலையத்தில் அவர் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோது பிறந்து ஒரு வாரமே ஆன பெண் குழந்தையுடன் அங்கு வருகைதந்துள்ளார்.
கோவிந்தம்மாளிடம் பேச்சு கொடுத்த, அவர் பின்னர் கழிவறைக்கு செல்வதால் குழந்தையை கவனிக்கும்படி கூறி அவரிடம் கொடுத்துவிட்டு சென்றார்.
நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் திரும்பிவரவில்லை.
இது குறித்து திருவள்ளூர் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொலிஸ் அதிகாரிகள் விரைந்து வந்து குழந்தையை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
குழந்தையை விட்டுச் சென்ற பெண் யார்? தவறான முறையில் பிறந்த குழந்தையா? அல்லது கடத்தப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.