மன்னாரில் நீர் நிறைந்த குழிக்குள் விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி!
மன்னாரில் நீர் நிறைந்த குழிக்குள் விழுந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் தோட்டவெளி பகுதியிலேயே இன்று(சனிக்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தோட்டவெளியிலுள்ள குறித்த நீர் நிறைந்த குழிக்கு நீராடச்சென்ற வேளையிலேயே சிறுவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 7 மற்றும் 8 வயதுடைய சிறுவர்களே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்து.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.