வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய சமைத்த உணவில் முறைக்கேடு!
கிளிநொச்சியில் கடந்த இரு சில தினங்களாக பெய்த கடும் மழை காரணமான சில இடங்கள் வெள்ளத்தினால் மூழ்கியிருந்தது.
இதனால் அப் பகுதிகளை சேர்ந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி பொதுநோக்கு மண்டபங்களில் தங்கியிருந்தனர்.
இவர்களுக்கு உடனடியாக சமைத்த உணவுகளை இராணுவத்தினரும், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ரஜனிகாந்தும் வழங்கியிருந்தனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குவற்கு ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவுக்காக 300 ரூபா வீதம் நிது ஒதுக்கப்பட்டு கிளிநொச்சியில் உள்ள கூட்டுறவு அமைப்பு ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
ஆனால் குறித்த கூட்டுறவு அமைப்பானது ஒதுக்கப்பட்ட நிதிக்கு அமைவாக உணவுகளை வழங்கவில்லை என பாதிக்கப்பட்ட பொது மக்களும், பிரதேச அமைப்புகளும் கூட்டிக்காட்டியுள்ளன.
இரவு உணவாக அரை ராத்தல் பாண் பருப்பு கறி வழங்கப்பட்டுள்ளன. இதன் பெறுமதி 40 ரூபா பின்னர் மறுநாள் காலை உணவாக இடியப்பம் வழங்கப்பட்டுள்ளது அதன் பெறுமதி 60 ரூபா. பின்னர் மதிய உணவு குறித்த சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர்கள் அன்றையதினம்(09-11-2018) ஒவ்வொருவருக்கும் அரைபார்சல் பொதி செய்யப்பட்ட மதிய உணவையே வழங்கியுள்ளனர்.
இது தொடர்பில் சங்கத்தின் பொது முகாமையாளருடன் தொடர்பு கொண்டு வினவிய போது தங்களுக்கு அதிகாரிகளினால் அவ்வாறு வழங்குமாறு பணிக்கப்பட்டதாகவும் அதற்கமைவாகவே வங்கியுள்ளோம் என பதிலளி்த்துள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
200 ரூபாவுக்கு சாதரணமாக அரைபார்சல் வழங்கியுள்ளனர் என்றும், மக்களுக்கான நிதியை இவ்வாறு முறைகேடு செய்வது கவலையளிக்கிறது என்றும் பொது மக்கள் தெரிவித்துள்ளதோடு மாவட்ட அரச அதிபருக்கு இது தொடர்பில் தங்களின் மக்கள் அமைப்புக்கள் மூலம் முறையிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.