கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பம்

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று காலை சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

இச் சிரமதானப் பணியில் மாவீரர்களது பெற்றோர், உறவுகள், மக்கள் , மாவீரர் துயிலுமில்ல செயற்பாட்டு குழுவினர் ,அரசியல் கட்சிகள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்

கடந்த ஆண்டு மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டன.

இதனால் இம்முறை முன்னதாகவே மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகளை செய்யும் பொருட்டு துயிலுமில்ல சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net