மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை காரணமாக 16,632 குடும்பங்கள் பாதிப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்சியாகப் பெய்துவரும் அடை மழை காரணமாக 16,632 குடும்பங்களைச் சேர்ந்த 57,051 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த 242 குடும்பங்களைச் சேர்நத 691 நபர்கள் 3 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்ட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுரை 27 வீடுகள் முழுமையாக சேதமடைந்தும், 57 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.