வவுனியாவில் வாள்வெட்டு: இளைஞன் வைத்தியசாலையில்!
வவுனியா பட்டக்காடு பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த இளைஞரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா மன்னார் வீதி பட்டக்காடு பகுதியில் இருவருக்கிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் இவ் வாள்வெட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் 23 வயதுடைய இளைஞரொருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.