//anjeng வவுனியாவில் ரயிலிலிருந்து வீழ்ந்து வைத்தியர் படுகாயம்! | Mukadu

வவுனியாவில் ரயிலிலிருந்து வீழ்ந்து வைத்தியர் படுகாயம்!

வவுனியாவில் ரயிலிலிருந்து வீழ்ந்து வைத்தியர் படுகாயம்!

வவுனியா தாண்டிக்குளத்தில் புகையிரத்தில் இருந்து வீழ்ந்து வைத்தியர் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயில் இன்று மதியம் 12.30 மணியளவில் தாண்டிக்குளம் ரயில் நிலையத்தில் நிறுத்தியவுடன் முல்லைத்தீவை சேர்ந்த வைத்தியர் ஒருவர் இறங்க முற்பட்டுள்ளார்.

எனினும் ரயில் நிலையத்தின் தளம் குறித்த பகுதி வரைக்கும் நீள்மானதாக இன்மையால் அவர் திடீரென பள்ளமான பகுதியில் வீழ்ந்துள்ளார்.

இதன் காரணமாக காலில் உடைவு ஏற்பட்ட நிலையில் குறித்த வைத்தியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net