கடின உழைப்பாளிகள் பட்டம் வென்ற இந்தியா!

கடின உழைப்பாளிகள் பட்டம் வென்ற இந்தியா!

சர்வதேச நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களிடையேயும், ஏனைய நாட்டவர்களிடையேயும் நடத்தப்பட்ட ஆய்வில் வாரம் 5 நாட்கள் பணி மற்றும் 2 நாட்கள் விடுமுறை போதுமானதாக கூறும் பணியாளர்களுள் இந்தியர்களே அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

சர்வதேச மனிதவள மேலாண்மை நிறுவனமான குரோனோஸ் இன்கார்பரேட்டட் ஆய்வில் 69 சதவீத இந்தியர்கள் இவ்வாறு பதில் அளித்துள்ளனர்.

மக்கள் ஒரு வாரத்திற்கு எத்தனை நாட்கள் வேலை செய்வது போதுமானதாக நினைக்கிறார்கள் என்று ஒரு அந்த நிறுவனம் ஆய்வை நடத்தியது.

இந்த ஆய்வு அவுஸ்ரேலியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, மெக்ஸிகோ, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பணிபுரியும் 2,772 முழு நேர மற்றும் பகுதிநேர ஊழியர்களிடையே நடத்தப்பட்டது.

இதன் முடிவில் அவுஸ்ரேலியா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் வாரத்தில் 4 நாட்களுக்கு வேலை செய்வது முறையானது என்று கூறியுள்ளனர்.

மெக்ஸிகோ மற்றும் அமெரிக்காவில் 4 நாட்கள் போதுமானதாக உணர்கிறார்கள். ஆனால் இந்தியர்களோ 69 சதவிகிதம் பேர், 5 நாட்கள் வேலை சரி தான் என்று கூறியுள்ளனர். இது திருப்தியளிப்பதாகவும் 2 நாட்கள் விடுமுறை போதுமானதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிக கடின உழைப்பாளிகள் உள்ள நாட்டிற்கான பட்டத்தை இந்தியா வென்றுள்ளது. இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால் இந்தியர்களில் 35 சதவிகிதம் பேர் வாரத்தில் கூடுதல் விடுமுறைக்காக சம்பள இழப்பையும் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net