கீரிமலை அம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்
யாழ். கீரிமலையிலுள்ள அம்மாச்சி உணவகத்தை அடையாளம் தெரியாதோர் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் உணவகத்தின் கண்ணாடி மற்றும் ஜன்னல்கள் அடித்து உடைக்கப்பட்டுள்ளன.
அடையாளம் தெரியாதோரினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.