யாழில் திருடிய தாலிக்கொடியை திருப்பிக்கொடுத்த கொள்ளையர்கள்!

யாழில் திருடிய தாலிக்கொடியை திருப்பிக்கொடுத்த கொள்ளையர்கள்!

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, வீட்டின் உரிமையாரை வெட்டிக்காயப்படுத்தி நகைகளை கொள்ளையிட்டு சென்ற கொள்ளையர்கள், வீட்டு உரிமையாளரது மனைவியின் தாலிக்கொடியை மூன்று நாட்களின் பின்னர் வீட்டு வளவுக்குள் வீசிச் சென்றுள்ளனர்.

யாழ்.கொட்டடி சூரிய புரத்தில் கடந்த 09ஆம் திகதி இரவு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்கள் வீட்டு உரிமையாளரை வாளினால் வெட்டி காயப்படுத்தியதுடன், வீட்டில் இருந்தோரை வாள் முனையில் மிரட்டி தாலிக்கொடி உட்பட 18 பவுண் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கொள்ளை இடம்பெற்று மூன்று நாட்களின் பின்னர் நேற்றைய தினம்(திங்கட்கிழமை) காலை வேளையில் கொள்ளையிடப்பட்ட நகைகளில் தாலிக்கொடி மாத்திரம் வீட்டு வளவுக்குள் இருந்து வீட்டின் உரிமையாளரால் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளையர்களே தாலிக்கொடியை மீள கொண்டு வந்து வீட்டு வளவுக்குள் வீசி சென்று இருக்கலாம் என வீட்டின் உரிமையாளர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net