கிளிநொச்சியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்.

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்.

கிளிநொச்சி குமாரபுரம் பகுதியில் வசித்துவரும் 29 வயதுடைய மரியஜெபசேன் விஜிதன் என்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முந்தினம் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் உறவினர்கள் தெரிவிக்கையில் குமாரபுரம் புன்னை நீராவியடியினை சேர்ந்த குடும்பஸ்தர் முன்னாள் போராளி இவர் மூன்று ஆண்டுகளாக புனர்வாழ்வு பெற்று குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் முடித்த இவருக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

இந்நிலையில் நெற்று முந்தினம் இரவு வீட்டில் திடீரென உயிரிழந்துள்ளார் இவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மரண வசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 11 ஆம் திகதியன்று முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பிரோத பரிசோதனையின் போது இவரது உயிரிழப்பு தொடர்பில் உறுதியான தகவலை வெளியிட முடியாத காரணத்தால் இவரது மரபணுக்கள் ஆய்விற்காக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன

குறித்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 1747 Mukadu · All rights reserved · designed by Speed IT net