கிளிநொச்சி அக்கராயன் ஸ்கந்தபுரம் இணைப்பு வீதிக்கான நிரந்தர புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
ஸ்கந்தபுரம் பகுதியில் மிக நீண்டகாலமாக அவ் இணைப்பு வீதி பாவனைக்கு உதவாத வகையில் இருந்த நிலைமையை கருத்தில் கொண்டு அதனுடைய பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
அதனுடைய முதலாவது கட்டமாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை வேண்டுகோளுக்கு அமைய குறித்தொதுக்கப்படட நிதியின் கீழ் அவ் வீதி அமைப்பு பணிகள் முதலில் மேற்கொள்ளப்பட்டது
ஸ்கந்தபுரம் அக்கராயன் இணைப்பு வீதியினை ஈச்சங்குளம் வரை குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் புனரமைக்கப்பட்டிருந்தது.
ஏனைய ஈச்சங்குளத்தையும் அதனோடு இணைந்த பகுதியினையும் புனரமைத்து தருமாறு வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன் அவர்களிடம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை விடுத்த வேண்டுகோளுக்கு அமைய மேலும் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது அதன் இரண்டாம் கட்ட பணிகள் இன்று (13.11.2018) காலை 09.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது
இந்த நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் அக்கராயன் மகா வித்தியாலயத்தின் பிரதி முதல்வர் அக்கராயன் வட்டார உறுப்பினர் தயாபரன் கிராம சேவையாளர் சபாரத்தினம் கோணாவில் வடடார உறுப்பினர் சுப்பையா மற்றும் அப்பகுதியின் கிராமிய பொது அமைப்புகளின் பிரதி நிதிகள் கலந்துகொண்டனர்.