கிளிநொச்சி டிப்போச் சந்தியில் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவு சின்னம் அமைக்க கோரிக்கை.

கிளிநொச்சி டிப்போச் சந்தியில் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவு சின்னம் அமைக்க கோரிக்கை.

கிளிநொச்சி டிப்போச் சந்தியில் அமைந்துள்ள பசுமை பூங்கா காணியில் இந்த மண்ணில் இடம்பெற்ற யுத்தத்தில் கொல்லப்பட்ட அனைவரது நினைவாக நினைவுச் சின்னம் ஒன்றை அமைக்க கரைச்சி பிரதேச சபை நடவடிக்களை எடுக்க வேண்டும் என பிரதேச சபையின் உறுப்பினர் தா.ரஜனிகாந் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த திங்கள் கிழமை இடம்பெற்ற சபை அமர்வின் போது இக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி டிப்போச் சந்தியில் அமைந்துள்ள பசுமை பூங்கா கரைச்சி பிரதேச சபையிடம் நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன் எதிர் பக்கத்தில் இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ஸ என்பரால் தமிழ் மக்களிக்கு அவமானமாக நிறுவப்பட்டுள்ளது.

எனவே அங்கு வருகின்ற தென்னிலங்கை மக்களுக்கு ஒய்வெடுக்கவும், உல்லாசம் புரிவதற்குமாக பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

எனவே பசுமை பூங்காவின் ஏ9 வீதியின் பக்கம் வேலி அமைத்து வடக்கு பக்கமாக பாதை அமைப்பத்தால் அதனை தடுக்க முடியும் எனத் தவிசாளர் அ. வேழமாலிகிதன் தெரிவித்தார்.

இதன் போதே யுத்தத்தில் கொல்லப்பட்ட அனைவருக்கும் குறித்த பசுமை பூங்கா பகுதியில் நினைவுச் சின்னம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் அதன் அங்கு வருகின்ற தென்னிலங்கை மக்கள் உட்பட அனைவருக்கும் இங்கு நடந்த சம்பவங்கள் தெரியவரும் எனவும் பிரதேச சபை உறுப்பினர் தா.ரஜனிகாந் கோரிக்கை விடுத்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net