வடக்கை தாக்கவுள்ளதாக எச்சரிக்கப்படும் புயலின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல்

வடக்கை தாக்கவுள்ளதாக எச்சரிக்கப்படும் புயலின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பது மற்றும் முன் ஏற்பாடுகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் இன்று மாலை 4 மணியளவில் கிளிநாச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள், படையினர், பொலிசார் உள்ளிட்ட பலர் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் அனர்த்தத்திலிருந்து மக்களை பாதுகாப்பது தொடரபிலும், பாதுகாப்பான இடங்களை அடையாளம் காணல், சுகாதாரம், குடிநீர், மின்சாரம் மற்றும் மரங்கள் முறிவதிலிருந்து ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து மக்களை பாதுகாத்தல், முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளல் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டதுடன், பொருத்தமான திணைக்களங்கள் மற்றும் பொலிசார், படையினரிடம் பொருப்புக்களும் கையளிக்கப்பட்டன.

குறித்த கலந்துரையாடல் தொடர்பில் அரசாங்க அதிபர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில்,

வடக்கை தாக்கவுள்ளதாக எச்சரிக்கப்படும் புயலிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கரையோரங்களில் உள்ள மனைகளையும், மீனவர்கள் ஆள்கடலிற்கு செல்லாதவகையிலும் தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் சுகாதாரம் உள்ளிட்ட பல விடயங்கள் இன்று கலந்துரையாடப்பட்டதாகவும், அனர்த்தத்திலிருந்து மக்களை பாதுகாப்பது தொடர்பில் இன்று குறித்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் அஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் அனர்த்தம் ஒன்று ஏற்பட்டால் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொள்ளுமாறும் அரசாங்க அதிபர் இதன்போது குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடதக்கதாகும்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net