இலங்கையின் உள்விவகாரத்தில் இந்தியா தலையிட முடியாது: தமிழ்நாடு
இலங்கையில் தற்போது அரசியல் பிரச்சினை சூடுபிடித்துள்ள நிலையில், இலங்கையின் உள்விவகாரத்தில் இந்தியா தலையிட முடியாதென தமிழ்நாடு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் இதனைத் தெரிவித்துள்ளதாக டெக்கான் குரோனிக்கல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஒருநாட்டின் உள்ளக விவகாரங்களில் மற்றொரு நாடு எப்படியும் தலையிட முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், சிறுபான்மை மக்களின் நலன்களை கருத்திற்கொண்டு, அம்மக்கள் மீதான கரிசனை தொடர்ந்தும் நீடிக்குமென அமைச்சர் ஜெயக்குமார் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமைக்கு எதிராக, நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து உலக நாடுகள் பல உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.
இதேவேளை, இலங்கை விடயத்தில் சர்வதேசத்தின் தலையீடு அவசியமென கடந்த காலங்களில் இந்தியா வலியுறுத்தி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.