சபரிமலை பருவகாலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவைகள்!
சபரிமலை பருவகாலத்தை முன்னிட்டு சென்னை கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
சபரிமலை பருவகாலத்தை முன்னிட்டு சென்னை கொல்லம் இடையே சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து தெற்கு ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சபரிமலை பருவகாலத்தை முன்னிட்டு சனநெரிசலை தவிர்க்கும் விதமாக கீழ்க்கண்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
சென்னை சென்டிரல்-கொல்லம் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (வண்டி எண்:06047), வருகின்ற டிசம்பர் மாதம் 3, 5, 10, 12, 17, 19, 24, 26, 31 மற்றும் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் 2, 7, 9, 14 ஆகிய திகதிகளில் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
சென்னை சென்டிரல்-கொல்லம் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06049), அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4, 18, 25 ஆகிய திகதிகளில் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12 மணிக்கு சென்னை வந்தடையும்.
தாம்பரம்-கொல்லம் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06027) அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 2, 4, 7, 9, 16, 18, 21, 23, 25 ஆகிய திகிதிகளில் மாலை 5.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9.20 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
கொல்லம்-சென்னை சென்டிரல் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06050), அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6, 13, 20, 27 ஆகிய திகதிகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.
கொல்லம்-சென்னை சென்டிரல் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06048), வரும் டிசம்பர் மாதம் 4, 11, 13, 18, 20, 27 மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3, 8, 10 ஆகிய திகிதிகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.45 மணிக்கு சென்னை வந்தடையும்.
கொல்லம்-தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06028), அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3, 5, 8, 10, 12, 22, 24, 26 ஆகிய திகிதிகளில் காலை 11.30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். என ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.