பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்!
உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ராவில் பெண் ஒருவரை குரங்குகள் கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ராவில் உள்ள காகிரனுல் பகுதியை சேர்ந்தவர் பூரான்தேவி (வயது59) என்பவர், இவர் வயல் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த வேளையில் குரங்குகள் கூட்டம் அவரை சரமாரியாக தாக்கி கடித்தது.
குறித்த பெண் நிலைகுலைந்து கீழே விழுந்த நிலையில் அவரை மீண்டும் குரங்குகள் கடித்து குதறின.
படுகாயம் அடைந்த அவரால் எழுந்து ஓட முடியவில்லை என்பதுடன், இதைபார்த்து அப்பகுதி பொதுமக்கள், குரங்குகள் கூட்டத்தை விரட்டியடித்து விட்டு பூரான் தேவியை மீட்டு தனியார் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
மேலும் படு காயமடைந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ள நிலையில சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஆக்ராவில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. அவைகள் வீதியில் நடந்து செல்பவர்களை திடீரென்று பாய்ந்து தாக்குகின்றன.
தற்போது உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களிடம் கடும் அச்சம் நிலவுகின்றது.