வவுனியாவில் கடந்த 12 மணி நேரத்தில் 4 பேர் கைது!

வவுனியாவில் கடந்த 12 மணி நேரத்தில் 4 பேர் கைது!

வவுனியாவில் கடந்த 12 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 4 பேரை கேரள கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பயணிகளினால் உடமைகளில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் எடுத்துச் செல்லப்பட்ட 1 கிலோ 580 கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் 4 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்களிடமிருந்து 1கிலோ 580 கிராம் கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இன்றைய தினம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net