உடனடி தேர்தலே அரசியல் நெருக்கடிகளுக்கு ஒரே தீர்வு!

உடனடி தேர்தலே அரசியல் நெருக்கடிகளுக்கு ஒரே தீர்வு!

உடனடியாக தேர்தலை நடத்துவதன் மூலமே நாட்டின் நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி

சமகால அரசியல் நிலைமைகள் குறித்து கிளிநொச்சியிலுள்ள தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

”நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சம்பவங்களை நான் விமர்சிக்கப் போவதாக இல்லை. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு உடனடியாக முறையாக தேர்தலை நடத்த வேண்டும்.

தற்போதைய அரசியலில் பணம் என்ற விடயம் பாரிய தாக்கம் செலுத்தி வருகின்ற நிலையில், தேர்தலை உலக நாடுகள் அல்லது ஐ.நா. அமைப்புகளின் மேற்பார்வையின் கீழ் நடத்தாத பட்சத்தில், நடைபெறவுள்ள தேர்தலும் உண்மையான ஜனநாயக ரீதியிலான தேர்தலாக அமையாது” எனத் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net