வடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற யப்பான் 97 மில்லியன்களை வழங்கியுள்ளது

வடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற யப்பான் 97 மில்லியன்களை வழங்கியுள்ளது

வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு யப்பான் அரசு தற்போது 97 மில்லியன் ரூபாக்களை வழங்கியுள்ளது என ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த ஐந்தாம் திகதி கொழும்பில் யப்பானிய தூதுவருக்கும், ஹலோ ட்ரஸ்ட் கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தின் அதிகாரிக்கும் இடையே இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் வடக்கில் யாழப்பாணம், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் கண்ணி வெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

2020 கண்ணி வெடி அற்ற இலங்கை எனும் இலங்கை அரசின் இலக்கை நோக்கி பயணிப்பதற்கு யப்பானிய அரசின் இவ்வுதவி பெரும் பங்களிப்பை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 0823 Mukadu · All rights reserved · designed by Speed IT net