கிளிநொச்சி நகரில் ஆயுத முனையிலான திருட்டு சம்பவம் தொடர்பில் கிளிநாச்சி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவம் இரவு இடம்பெற்றுள்ளது. அடையாளம் காண முடியாத சிலர் வீட்டினை சேதப்படுத்தியும், தம்மை தாக்கியும் நகை மற்றும் ஆவணங்கள்
சிலவற்றை திருடி சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தின் போது தாலி, சங்கிலி மற்றும் ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாகவு்ம, திருட வந்தவர்கள் தம்மை அடையாளம் தெரியாதவாறு முகத்தினை மறைந்திருந்ததாகவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டினை உடைத்தும், கைத்துப்பாக்கியையும் அவர்கள் வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படும் அதேவேளை, குறித்த பகுதியில் போலி துப்பாக்கி ஒன்றும் கைவிடப்பட்டுள்ளது.
சம்பவத்தில் தம்மை குறித்த நபர்கள் தாக்கியதாக தெரிவித்து மூவர் கிளிநாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.