தொல்பொருள் மதிப்பு வாய்ந்த 122 குகைகள் கண்டுபிடிப்பு!

தொல்பொருள் மதிப்பு வாய்ந்த 122 குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

அம்பாறை – ரஜகலதென்ன தொல்பொருள் வளாகத்தில் தொல்பொருள் மதிப்பு வாய்ந்த 122 குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் பிரிவின் பேராசிரியர் கருணாசேன ஹெட்டியாரச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

983 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த குகைகள் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த குகைகளில் சிறப்புமிக்க சுகாதார அமைப்புக்களும் காணப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை வரலாற்றில் இதுபோன்ற குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதலாவது தடவை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net