வடமராட்சியில் வாள்வெட்டுக் குழுஅட்டகாசம்!

வடமராட்சியில் வாள்வெட்டுக் குழுஅட்டகாசம்!

வடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், குழப்பத்தில் ஈடுபட்டுள்ளது.

கஜா புயல் தாக்கம் ஏற்பட்ட நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் இமையாணன் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முகமூடிகளை அணிந்து முகத்தை மறைத்துக்கொண்டு வாள்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற குழுவினர், குறித்த வர்த்தக நிலையத்தை அடித்து நொருக்கி அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு அட்டகாசத்தில் ஈடுபட்டவர்கள், அங்கிருந்தவர்களை வாளைக் கொண்டு அச்சுறுத்தியுள்ளதுடன், அவர்களின் செயற்பாடுகள் அங்கிருந்த சீ.சீ.ரீ.வீ கமராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனைத் தொடர்ந்து அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றையும் இவர்கள் தாக்கியுள்ளனர். இதனால் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © 0998 Mukadu · All rights reserved · designed by Speed IT net