கம்பரலிய திட்டத்தின் கீழ் கரைச்சியில் 15 வீதிகள் புனரமைப்பு

கம்பரலிய திட்டத்தின் கீழ் கரைச்சியில் 15 வீதிகள் புனரமைப்பு

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நாடாளவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய வேலைத்திட்டமான கம்பரலிய திட்டத்தின் கீழ் 15 உள்ளக வீதிகள் புனரமைக்கப்படுகின்றன என கரைச்சி பிரதேச செயலக உதவி திட்டப்பணிப்பாளர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 15 உள்ளக வீதிகளுக்கும் தலா இரண்டு மில்லியன் வீதம் முப்பது மில்லியன்கள் ஒதுக்கப்பட்டு குறித்த வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கிளிநகரில் மத்திய ஆரம்ப வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள வீதி, இரத்தினபுரம் கண்ணன் கோவில் வீதி, நீதிமன்ற அருகாமை வீதி, பாராதிபுரம் செபஸ்ரியார் வீதி உள்ளிட்ட 15 வீதிகள் தார் வீதியாக புனரமைக்கப்படுகின்றன. இதற்காகன வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net