ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் போராட்டத்தில் கூட்டமைப்பு தொடர்ந்தும் ஈடுபடும்!
இலங்கை ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் ஈடுபடும் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவமோகன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இங்கு ஒரு அராஜக ஆட்சி ஒன்று மீண்டும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ தமக்கு பெரும்பான்மை இருக்கின்றது என கூறி ஆட்சியினை பொறுப்பேற்றிருந்தாலும், இதுவரையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினை காட்டவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முடியாமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது“ என தெரிவித்துள்ளார்.