டெஸ்ட் தொடரையும் பறிகொடுத்தது இலங்கை அணி!

டெஸ்ட் தொடரையும் பறிகொடுத்தது இலங்கை அணி!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ்காக 290 ஓட்டங்களையும், இலங்கை அணி 336 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டன.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸ்காக துடுப்பெடுத்தாட களம் இறங்கிய இங்கிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 346 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் அதன் தலைவர் ஜோ ரூட் 124 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்ததுடன், பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய ஆறு விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு 301 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களம் இறங்கிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 243 ஓட்டங்களை மாத்திர பெற்று 57 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மத்தியுஸ் 88 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் Leach ஐந்து விக்கட்டுக்களையும், Moeen Ali நான்கு விக்கட்டுக்களையும் வீழ்த்தியிருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி இரண்டுக்கு பூச்சியம் என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.

குறித்த போட்டியின் ஆட்ட நாயகனாக இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் தெரிவானார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net