யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களிற்கு உலருணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு இன்று பகல் 12 மணியளவில் இடம்பெற்றது. கனடா புலம் பெயர் உறவுகளின் உறங்கா விழிகள் அமைப்பின் உதவியுடன் கிளிநொச்சி மாவட்ட மாற்று திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது யுத்த்தினால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 300 குடும்பங்களிற்கு 4000 ரூபா பெறுமதியான உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது, இந்நிகழ்வில் மு.பா உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எஸ் கஜேந்திரன், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் குறிப்பிடப்பட்ட விடயங்களின் முக்கிய குறிப்பு –
நிகழ்வில் உரையாற்றிய கஜேந்திரகுமார், யுத்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு இவ்வாறு சிறிய சிறிய உதவிகளை செய்து அவர்களை முன்னேற்ற முடியாது.
பாதிக்கப்பட்ட அனைவரிற்கும் உதவிகள் கிடைக்க கூடியவாறு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.
உரையாற்றிய கஜேந்திரன் குறிப்பிடுகையில்,
உறங்கா விழிகள் அமைப்பின் இ்த செயற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவித்தார்.
உரையாற்றிய மணிவண்ணன்,
நாம் நம்பி வாக்களித்து அனுப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் நடந்து கொள்ளும் விதம் தொடர்பில் குறிப்பிட்டார்.
அதேவேளை நாம் அனுப்பிய எம்மவர்கள் பேரினவாத அரசுடன் இணைந்து செயற்படுகின்ற விடயம் தொட்ரபிலும் குறிப்பிடப்பட்டது