மாணவர்களின் சிகை அலங்காரம் குறித்த கவனம் பாடசாலைகளில் இல்லை!
வவுனியாவில் பிரபல பாடசாலைகளில் மாணவர்கள் மத்தியில் சிகை அலங்காரம் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை என சமூக ஆர்வலர்களால் குற்றம் சாட்டப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியாவில் பிரபல பாடசாலைகளில் ஆண் மாணவர்களின் சிகை அலங்காரம் மற்றும் தாடி வளர்த்து வருதல் தொடர்பாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனம் செலுத்துவதில்லை.
இதன் காரணமாக மாணவர்கள் மிகவும் அசிங்கமாக மாணவர்களுக்கு பொருத்தமற்ற சிகை அலங்காரங்களுடன் பாடசாலைகளுக்கு வருவதனை அவதானிக் முடிகின்றது.
வட மாகாண கல்வி அமைச்சு மாணவர்களின் சிகை அலங்காரம் மற்றும் உடை தொடர்பாக சுற்றுநிருபங்களை வெளியிட்டுள்ள நிலையிலும் அவை சிகை அலங்கரிப்பு நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் மாணவர்கள் இவ்வாறு பாடசாலைகளுக்கு அனுமதிப்பது தொடர்பாக அதிபர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.