யாழில் இரக்கமின்றி நாயை அடித்துக் கொன்ற நபர்!

யாழில் இரக்கமின்றி நாயை அடித்துக் கொன்ற நபர்!

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதிக்குள் வசிக்கும் நபர் நாய் ஒன்றை அடித்துக் கொலை செய்து, வீதியில் உள்ள குப்பைகளுடன் போட்ட இழிச்செயல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் உள்ள திருநெல்வேலியில் கடந்ந வாரம் ஒருவர் தனது வீட்டு வளவிற்குள் பிரவேசித்த தெரு நாயை அடித்துக் கொலை செய்துள்ளார்.

அவ்வாறு கொல்லப்பட்ட நாயை ஓர் பையில் பொதி செய்து மாநகர சபையினால் கழிவு சேகரிக்கும் இடத்தில் வீசிச் சென்றுள்ளார்.

குறித்த சம்பவம் இடம்பெற்று இரு தினங்களின் பின்னர் கழிவு அகற்ற சென்ற மாநகர சபை ஊழியர்கள் அதனை அவதானித்து அயலில் ஆராய்ந்த வேளையில் குறித்த செயலினை மேற்கொண்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சுகாதார மேற்பார்வையாளர் ஒருவர் குறித்த வீட்டின் உரிமையாளரை அனுகி அதனை உரிய முறையில் அகற்றுமாறு கோரிய போது அச் செயலை தான் மேற்கொள்ளவில்லை என மறுத்துள்ளார்.

இந்த நிலையில், மேலும் ஆராய்ந்த நிலையில் உயிரிழந்த நாய் குறித்த வீட்டிற்குள் செல்வது முதல் அடித்துக்கொள்வது மற்றும் பொதி செய்து எடுத்துச் செல்வது வரையான சம்பவங்கள் அயலில் உள்ள ஓர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரி.வி கமராவில் பதிவாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த வீடியோவினை காண்பித்து உறுதி செய்த நிலையில் வீதியில் எறிந்த நாயினை மீண்டும் வீட்டிற்கு எடுத்துச் சென்று புதைக்கப்பட்டுள்ளது.

Copyright © 4216 Mukadu · All rights reserved · designed by Speed IT net