மஹிந்த பிரதமருக்குரிய சலுகைகளை பயன்படுத்த முடியாது!

மஹிந்த பிரதமருக்குரிய சலுகைகளை பயன்படுத்த முடியாது!

மஹிந்த ராஜபக்ஷ பிரதமருக்குரிய எந்த சலுகைகளையும் அனுபவிக்க முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“நாட்டில் தற்போது நிலவும் குழப்ப நிலைகளுக்கு மஹிந்த ராஜபக்ஷ சட்டவிரோதமாக பிரதமராக நியமிக்கப்பட்டமையே காரணமாகும்.

இவ்வாறான நிலையில் அவர் அரசாங்கத்திலிருந்து பிரதமருக்குரிய எந்தவிதமான வரப்பிரசாதங்களையும் பயன்படுத்த முடியாது.

இந்நிலையில் நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ கெலிகொப்டரைப் பயன்படுத்தியுள்ளார்.

இதை அனுமதிக்க முடியாது. உடனடியாக அவர்கள் பதவி விலகி நாட்டினது குழப்பநிலையினை விரைவில் தீர்ப்பதற்கு தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்த வழிவிடவேண்டும்.

சட்டவிரோதமான பிரதமர் நியமனத்தினால் ஏற்பட்ட குழப்பநிலையினால் ஜப்பானிலிருந்து இலங்கைக்கு கிடைக்க வேண்டிய நிதியுதவியான 2 பில்லியன் டொலர் மற்றும் அமெரிக்காவிலிருந்து கிடைக்க வேண்டிய 700 பில்லியன் அமெரிக்க டொலர் என்பவை நிறுத்தப்பட்டுள்ளன.

இது எமது நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தினைச் செலுத்தும். இந்நிலையில் இவர்களது கைகளில் நாட்டினை கையளித்தால் நாடு பாதாளத்திற்குள் தள்ளப்பட்டுவிடும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net