வவுனியா தெற்கு பிரதேச சபையில் கால்நடைகளால் அலுவலகப்பணிகள் பாதிப்பு!
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால கடந்த சில தினங்களாக வீதியிலுள்ள கால்நடைகள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன இந்நிலையில் அவற்றை பிரதேச சபையில் அடைத்து, கட்டி வைக்கப்படாமல் வளவில் கைவிடப்பட்டுள்ளது. இதனால் அலுவலகத்திற்குள் மாடுகள் செல்கின்றன.
இதன் காரணமாக அங்கு செல்லும் மக்களுக்கும் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இடையூறுகள் ஏற்படுகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய காலங்களில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத்தவிசாளரினால் வீதிகளில் கைவிடப்பட்ட கால்நடைகள் பிடிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் அவற்றை பாதுகாப்பாக கட்டி வைக்கப்படவில்லை. பிரதேச செயலகத்திலுள்ள வளவில் கைவிடப்பட்டுள்ளது.
அலுவலகத்திற்குள் உள்ள கால்நடையினால் மக்களுக்கு இடையூறுகள் ஏற்படுவதுடன் அலுவலகத்திற்குள் சென்று அலுவலகப்பணியாளர்களுக்கும் இடையூறுகள் ஏற்படுத்தி வருவதாக உத்தியோகத்தர்களும் தெரிவித்துள்ளனர்.
வெளியே வீதியில் பொது மக்களினால் கைவிடப்பட்ட கால்நடைகளினால் வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனத் தெரிவித்து தமிழ் தெற்கு பிரதேச சபையினால் கையகப்படுத்தப்பட்டுள்ள கால்நடைகள் பிரதேச சபையின் அலுவலகத்திற்குள் கட்டிவைக்கப்படவில்லை அங்கேயும் கைவிடப்பட்டுள்ளதால் அங்கு சேவைகள் பெறச் செல்லும் மக்களுக்கும் அலுவலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கும் இடையூறுகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.