இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்படமாட்டாது!

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்படமாட்டாது!

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்படமாட்டாது. என்று எந்திரி சுதாகரன் தெரிவிப்பு.

தற்போது மழைவீழ்ச்சி குறைந்து காணப்படுவதால் இரணைமடு குளத்தின் நீரேந்தும் பகுதிகளிலிருந்து வரும் மழை நீர் குறைந்து வருவதனால் வான்கதவுகள் திறக்கப்படமாட்டாது.

இரணைமடு குளத்தினை தொடர்ந்து கண்காணிப்புகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்க விடையம்.

குளத்தில் நீர் 32.11, அடி இருப்பதனால் 36 அடிவரைக்கும் சேமிக்க முடியும் என்ற காரணத்தால் வான்கதவுகள் திறப்பதற்கு அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார்.

வானிலையில் தாழமுக்கம் எதுவும் ஏற்பட்டால் குளத்தின் நீர் உயர்ந்து 36 அடி வந்தால் வான் கதவுகள் திறக்கப்படும் என எந்திரி சுதாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட போகிறது என வதந்திகளை நம்பவேண்டாம் என கூறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net