ஏழு தமிழர்கள் விடுதலை! நீதிக்கு மாறாக செயற்படும் தமிழகத்தின் முக்கியஸ்தர்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் ஏழு தமிழர்களையும் விடுவிப்பதில் ஆளுநர் தொடர்ந்தும் தாமதத்தை வெளிப்படுத்தி வருவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிலையில், குறித்த 7 பேரையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்த உள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்.
ஏழு பேரின் விடுதலையில் தமிழக ஆளுநர் நீதிக்கு மாறாக செயற்பட்டு வருகிறார்.
அவர்களின் விடுதலை தொடர்பில் ஆளுநர் நடவடிக்கை எடுக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, தமிழக அரசாங்கம் அவர்களை விடுவிக்க கோரிய அமைச்சரவை பரிந்துரை ஒன்றை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
எனினும் ஆளுநர் அவர்களை விடுவிக்காது தொடர்ந்தும் தாமதம் செலுத்தி வருகிறார்.
எனவே மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் அவர்களின் விடுதலை தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, எதிர்வரும் 24ஆம் திகதி போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்.