தீவிர தமிழ்த் தேசிய போராளியின் மறைவு
தமிழ்த் தேசிய போராளியும், பிரபல இயக்குநர் கௌதமனின் தந்தையுமான வடமலை, பாண்டி ஜிப்மரில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
தீவிர தமிழ்த் தேசிய உணர்வாளரும் போராளியுமான இவர் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே ஊருக்குள் தாழ்த்தப்பட்டவர்களை குடியமர்த்தியுள்ளார்.
இதன் காரணமாக அவர் அவ்வூரிலிருந்தும் கூட ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட கலவரங்களால் பாதிக்கப்பட்ட பல ஈழத்து மக்களுக்கு உதவி செய்தவராகவும் அவர்களுக்கு உணவு உள்ளிட்ட பல வசதிகளை செய்து கொடுத்து பாதுகாத்துள்ளார்.
இந்நிலையில், இவரது இறுதி கிரியைகள் இன்றைய தினம் மாலை பாளையம் கிராமத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.