நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன்!
எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லையென வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தூரில் (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் கட்சி மேலிடத்திற்கு அறிவித்துள்ளேன். ஆகையால் இவ்விடயத்தில் தீர்மானிக்க வேண்டியது அவர்களே எனவும் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
மேலும் உடல்நிலை பாதிப்பு காரணமாகவே தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போதே மக்களை கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.