இரணைமடுகுளம் திறக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை!

இரணைமடுகுளம் திறக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை பிரதிப்பணிப்பாளர் சுதாகரன்!

கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் வான்கதவுகள் தற்போதைக்கு திறக்க்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் எதுவும் இல்லை கிளிநொச்சி பிராந்திய நீர்ப்பாசனத்திணைக்களப் பிரதிப் பணிப்பணிப்பாளர் நவரட்னம்சுதாகரன் தெரிவித்துள்ளார்.

இரணைமடுகுளம் இன்று திறக்கப்படும், நாளை திறக்கப்படும் என மக்கள் மத்தியில் கருத்துக்கள் தெரிவிக்கப்படடு வருகிறது.

ஆனால் நிலைமை அவ்வாறில்லை. இன்றைய நிலையில்(21) குளத்தில் 33 அடி நீர் காணப்படுகிறது.

அத்தோடு தற்போது மழைவீழ்ச்சியும் குறைவடைந்துள்ளதோடு, குளத்திற்கான நீர் வரவும் குறைந்துள்ளது. எனத் தெரிவித்த பிரதிப்பணிப்பாளர் சுதாகரன்.

அபிவிருத்தியின் பின் குளத்தின் நீர் மட்டத்தினை 36 அடி வரை தேக்கி வைப்பதற்கு தீர்மானித்துள்ளோம், எனவே அதன் பின்னரே இரணைமடுகுளத்தின் வான்கதவுகள் திறப்பது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ளமுடியும், மேலும் இன்று(21) மாலைதொடக்கம் பிற்பகல் வேளைகளில் குறைந்தளவு மழைவீழச்சி கிடைப்பெறும் சாத்தியங்கள் காணப்படுவதாக காலநிலை தகவல்களும் எதிர்வு கூறியுள்ளதோடு, மார்கழி மாதமும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதனால் குளத்திற்கான நீர் வரவு இருக்காது எனவே தற்போதைய நிலைமையில் திறப்பதற்கான எந்த வாய்ப்புக்கள் இல்லை.

ஆனால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு தாழமுக்கம் சூழ்நிலையில் அதிகளவு மழை வீழ்ச்சி ஏற்பட்டு குளத்திற்கான நீர் வரவு அதிகரித்தால் நிலைமைகளில் மாற்றம் ஏற்படும்.எனத் தெரிவித்தார்.

இரணைமடுகுளம் 24 மணிநேர தொடர் கண்காணிப்பில் இருப்பதோடு, 14 வான்கதவுகளும் காணப்படுகிறது எனவே திறக்கப்படும் நிலைமையில் அது தொடர்பில் மாவட்டத்தின் அனைத்து தரப்பினர்களுக்கும் முன் அறிவித்தல் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net