யாழில் பாழடைந்த வீட்டிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

யாழில் பாழடைந்த வீட்டிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

யாழ். சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகிலிருந்து இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியிலுள்ள பாழடைந்த வீடொன்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடற்தொழிலை மேற்கொள்ளும் யாழ். கொய்யாத்தோட்ட பகுதியை சேர்ந்த விமலதாஸ் ஜோசப் ஜெபர்சன் (33 வயது) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அப்பகுதி மக்கள் சடலம் தொடர்பில் வழக்கிய தகவலின் அடிப்படையிலேயே யாழ். பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Copyright © 3056 Mukadu · All rights reserved · designed by Speed IT net