வவுனியாவில் வாள்வெட்டு ; இருவர் வைத்தியசாலையில், மூவர் கைது!

வவுனியாவில் வாள்வெட்டு ; இருவர் வைத்தியசாலையில், மூவர் கைது!

வவுனியா தாலிக்குளம் பகுதியில் நேற்று (20) மதியம் 1.00 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாலிக்குளம் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற கருத்து முரண்பாடு வாள்வெட்டு தாக்குதலாக மாறியதில் வாரிக்குட்டியூர் பகுதியினை சேர்ந்த அருணாசலம் தனுசன் (வயது 20) , ராஜரட்ணம் (வயது 20) ஆகிய இரு இளைஞர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பூவரசங்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பாக நேற்று மாலை 18,18,24 வயது மூன்று இளைஞர்களை கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Copyright © 6286 Mukadu · All rights reserved · designed by Speed IT net