எழிலனின் தந்தையாரின் இறுதிக்கிரியை இன்று

எழிலனின் தந்தையாரின் இறுதிக்கிரியை இன்று

தமிழீழ விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளரும், இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவருமான எழிலனின் தந்தை கிருஸ்ணபிள்ளை சின்னத்துரையின் இறுதிக்கிரியை இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகின்றது.

கிளிநொச்சி விவேகானந்தநகரிலுள்ள அன்னாரின் இல்லத்தில் தற்போது இறுதிக்கிரியை நிகழ்வு இடம்பெற்று வருவதோடு, அதன் பின்னர் விவேகானந்தநகர் இந்து மயானத்தில் தகனஞ்செய்யப்படவுள்ளது.

அன்னாரின் இறுதிக்கிரியை நிகழ்வில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் க.சர்வேஸ்வரன், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், மூத்த ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோசப் தலைமையில் எழிலன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்தனர்.

எனினும், அவர்கள் பற்றிய தகவலை இலங்கை அரசாங்கம் வெளியிடாத நிலையில், இறுதிக்காலம் வரை மகனின் நினைவுடன் கிருஸ்ணபிள்ளை சின்னத்துரை நோய்வாய்ப்பட்டிருந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net