ஐக்கிய இராச்சியத்தின் வீர தமிழர் முன்னணியின் ஏற்பாட்டில்அறம் செய் அறக்கட்டயைின் உதவியுடன்எமக்காக வாழ்ந்தவரை வாழவைப்போம் எனும் தொனிப்பொருளில் உயிரிழந்த போராளிகளின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
சுமார் 400 மேற்பட்ட மக்கள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
விடுதலை போராட்டத்திற்கு தமது உயிர்களை இழந்த போராளிகளின் பெற்றோர் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
உயிரிழந்தோரின் நினைவாக வைக்கப்பட்டிருந்த பொது படத்திற்கு பெற்றோர் மலர் தூவி வணக்கம் செலுத்தியிருந்தனர்.
குறிதத் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிடுகையில்,
2009ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலத்தில் இந்த போராட்டம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன்.
உண்மையில் இந்த போராட்டம் தேவைதானா? பல்லாயிரம் போராளிகளை நாம் இழந்திருக்கின்றோம்.
2009ம் ஆண்டுக்கு பின்னர் இப்போராட்டம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
சர்வதேச நாடுகள் பல இணைந்து, விடுதலை போராட்டத்தை பயங்கரவாத புாராட்டமாக மாற்றி, முள்ளிவாய்க்காலில் பெரும் இன அழிப்பையும் மேற்கொண்டிருந்தது மாத்திரமல்லாது, 2009ம் ஆண்டுக்கு பின்னர் முள்ளிவாய்க்கால் நனைவேந்தல், இப்போராட்டம் தொடர்பிலாக அனைத்து விடயங்களிலிருந்மு் மக்களை விடுவிக்கம் வகையில் பல்வேறு முலை சலவைகளும் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ் அரசியலை பொருத்தவரையில், இவ்விடுதலை பொராட்டம் மிக பெரிய இனவளிப்புடன் நிறைவுபற்ற நிலையில், இனி விடுதலை பற்றி சிந்தித்தால் முடிவு இப்படிதான் வரும் என்பதால் நாம் அனைத்தையும் கைவிட்டு எமது சொந்த விடயங்களையும்., அன்றாட பிரச்சினைகளையும் தீர்த்து வாழுவோம் எனும் அளவிற்கு அழுத்தங்கள் போடப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த போராட்டம் 70 வருடங்களிற்கு மேல் காணப்பட்டமையை நியாயமற்றது என காண்பிப்பதற்கு, தமது சொந்த நலனிற்காவது இவ்வாறு போரினால் பாதிக்கப்பட்டவர்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதற்காவது முன் வந்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு கிழக்கு மக்கள் கல்வி உள்ளிட்ட விடயங்களில் கொழும்பிற்கு அடுத்த நகரமாக யாழ்ப்பாணம் காணப்பட்டது. இன்று நாம் கடைசியில் உள்ளுாம்.
போருக்கு பின்னர் 8 வருடங்களிற்குள் இந்த பாதிக்கப்பட்ட மக்களிற்கு வேண்டுமான அளவு அபிவிருத்தியை செய்திருக்கலாம் எனவும், கடற்தொழில், விவசாயம் உள்ளிட்டவற்றை ஊக்குவித்திருக்கலாம் எனவும் குறிப்பிட்ட அவர், மாறாக சிங்கள இனத்தவரை இங்கு வந்து கடற்பிரதேசங்களை ஆக்கிரமிப்பதற்கு அவர்கள் உடந்தையாக இருந்தமை தொடர்பிலும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை குாப்பாய் பகுதியில் நினைவேந்தல் மேற்கொள்வதற்கு பொலிசாரால் நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டமை தொடர்பிலும் அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
சமகால அரசியல் நிலைமை தொடர்பில் அவரிடம் நியூஸ் பெஸ்ட் வினவியது,
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தற்புாது அவர்களின் செயற்பாடுகளில் அதிர்ப்தி அடைந்தவர்கள் வெளியேறி வருகின்றனர்.
அவர்கள் வெளியுற வேண்டிய கூழல் ஏற்பட்டுள்ளது. இதைதான் நாங்கள் 2009ம் ஆண்டு செய்திருந்தோம். அவர்களின் குறித்த நிலைப்பாடு தொடர்பில் தாம் தொடர்ந்தும் விமர்சித்து வந்த நிலையில் தற்போது பலரும் உணர்வதாகவும் தெரிவித்தார்.
கூட்டமைப்பில் உள்ள 14 பேரும் தொடர்ந்தும் சிங்கள தேசிய கட்சிகளிற்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றமை தொடர்பிலும், இதனால் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்ப்பதில் ஆர்வம் செலுத்தாது தமது சுயநலத்திற்காக அவர்கள் செயற்படுவது தொடர்பிலும் அவர் விமர்சனம் தெரிவித்தார்