சூதாட்டத்தில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கை உயர்வு!

சூதாட்டத்தில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கை உயர்வு!

சூதாட்ட பிரச்சனையுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை இரண்டு ஆண்டுகளில் நான்கு மடங்காக (50000 க்கும் மேல்) அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் 11 முதல் 16 வயதிற்குட்பட்ட 70,000 சிறுவர்கள் சூதாட்டம் தொடர்பான பிரச்சனைகளை விருத்திசெய்வதற்கான அபாயம் நிலவுவதாகவும் சூதாட்ட ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள இவ்வாய்வறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுமார் 450,000 சிறுவர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வெண்ணிக்கை மதுப்பாவனை, புகைபிடித்தல் மற்றும் போதைப்பொருள் பாவனை பிரச்சினைகளைக் கொண்ட சிறுவர்களின் எண்ணிக்கையை விட அதிகமெனவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

சிறுவர்களிடையே அதிகரித்துவரும் சூதாட்ட பிரச்சினைகளுக்கு வீடியோ கேம்ஸ் மற்றும் செல்போன் அப்ஸ் ஆகியவை மிகமுக்கிய காரணிகளென எச்சரித்துள்ள சூதாட்ட ஆணைக்குழு இதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்படவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.

Copyright © 6130 Mukadu · All rights reserved · designed by Speed IT net